போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது! - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை - மட்கோ, மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கதக்க துலாஸ் மதுசங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 14 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad