பள்ளிவாசல்கள் அமைந்துள்ள காணியில் குர்பானுக்கு தடையானது அரசை இக்கட்டுக்கு உள்ளாக்கி விடும் : முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும், வக்கு சபையும் தனிப்பட்டவர்களுடைய சொந்த அமைப்பு அல்ல - அப்துல் சத்தார் - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

பள்ளிவாசல்கள் அமைந்துள்ள காணியில் குர்பானுக்கு தடையானது அரசை இக்கட்டுக்கு உள்ளாக்கி விடும் : முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும், வக்கு சபையும் தனிப்பட்டவர்களுடைய சொந்த அமைப்பு அல்ல - அப்துல் சத்தார்

பள்ளிவாசல்கள் அமைந்துள்ள காணியில் குர்பான் கொடுப்பதற்காக மாடுகள் அறுப்பதற்கு அனுமதியில்லை என முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் உள்ள வக்பு சபை எடுத்துள்ள தீர்மானமானது அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வெறுப்புணர்ச்சியை தூண்டுவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாக அமைந்துள்ளது. இத்தீர்மானம் எல்லோருடனும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இது ஒரு பொருத்தப்பாடற்ற தீர்மானமாகும். இந்த தீர்மானத்திற்கு எதிராக வன்மையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புனித ஹஜ்ஜுப் பெருநாளைக்காக முஸ்லிம்கள் குர்பான் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் தருணத்தில் வக்பு சபையினர் திடீரென சுயாதீனமான தீர்மானம் ஒன்றை எடுத்து பள்ளியில் குர்பான் கொடுக்க முடியாது என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

பள்ளிகளில் குர்பானை அறுக்கும் போது அதன் கழிவுகளை அகற்றுவதற்கான இட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வீடுகளில் அவ்வாறான நிலை இல்லை. வீடுகளில் அறுக்கும் போது அதன் கழிவுகள் அடுத்த சமூகத்தினருக்கு பெரும் இடையூறாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

தற்போது வக்பு சபையினர் முறையற்ற விதத்தில் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் வக்கு சபையும் தனிப்பட்டவர்களுடைய சொந்த அமைப்பு அல்ல.

இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரிதிநிதிகளையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ ஆதரவாளர்களையோ கேட்டு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் கால காலம் தொட்டு முஸ்லிம் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான நிறுவனமாகும்.

எனவே இந்த தீர்மானத்திற்கு எதிராக வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு இந்த தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுமாறு தொவித்துள்ளார்.

இக்பால் அலி

No comments:

Post a Comment

Post Bottom Ad