இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி

யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இத்தாலி.

இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 6 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தப் போட்டியில் உலக தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள இத்தாலி அணி இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் எவரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67 ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

இதையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பின்னர் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்று யூரோ கிண்ணத்தை கைப்பற்றியது.

No comments:

Post a Comment