இனவாதக் கருத்துகளைப் பதிவு செய்வோர் காற்பந்து விளையாட்டுகளை பார்வையிட தடை - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

இனவாதக் கருத்துகளைப் பதிவு செய்வோர் காற்பந்து விளையாட்டுகளை பார்வையிட தடை

காற்பந்து வீரர்களைக் குறி வைத்து இணையத்தில் பதிவு செய்யப்படும் இனவாதக் கருத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தப் போவதாகப் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இனவாதம் ஒரு பிரச்சினையாக இருந்து வருவதை அவர் ஒப்புக் கொண்டார்.

இனவாதக் கருத்துகளைப் பதிவு செய்வோர், குற்றம் நிரூபிக்கப்பட்டால், காற்பந்து விளையாட்டுகளை பார்வையிட தடை விதிக்கப்படலாம்.

அவற்றை நீக்கத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, அதன் அனைத்துலக வருவாயில் 10 ஆண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம்.

அந்த நடவடிக்கைகள் குறித்து ஜான்சன் நாடாளுமன்றத்தில் பகிர்ந்துகொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad