துபாய் துறைமுகத்தில் வெடித்து சிதறி தீப்பிடித்த கொள்கலன் கப்பல் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

துபாய் துறைமுகத்தில் வெடித்து சிதறி தீப்பிடித்த கொள்கலன் கப்பல்

டுபாயில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் கப்பல் பயங்கரமாக வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜெபெல் அலி துறைமுகத்தில் தரித்து நின்ற குறித்த கப்பலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதையடுத்து, அது தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

மிகப்பெரிய கோள வடிவில் விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பு எரிய ஆரம்பித்துள்ளது.

இதனால் துறைமுகத்திலிருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டுபாய் நகரின் வானுயர்ந்த கட்டடங்களில் சுவர்களும் ஜன்னல்களும் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கப்பல் தீப்பிடித்து எரிந்த துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்களும் நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் உள்ளது.

விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றபோதிலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கப்பலில் இருந்ததா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad