அங்கீகரிக்கப்பட்ட மூலிகை மருந்தை உட்கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் - பேராசிரியர் ஜயந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

அங்கீகரிக்கப்பட்ட மூலிகை மருந்தை உட்கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் - பேராசிரியர் ஜயந்த ராஜபக்ஷ

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆயுர்வேத திணைத்தளத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மூலிகை மருந்தை உட்கொள்வதனால் உடலிலுள்ள அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடைகள் மற்றும் விலங்கியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியரான ஜயந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய ஒளடதங்கள் பலவற்றின் சேர்க்கையின் மூலமாக உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து கொள்வது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வின்படியே இது உறுதிப்படுப்பட்டது.

இந்த மூலிகை மருந்தானது, உடலில் வேகமாக பரவக்ககூடிய வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்கள் ஆகிய தொற்றுகளுக்கு எதிராக போராடி உடலை பாதுகாப்பதற்கான உடலில் அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் இதில் அடங்குகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில், "சமூகத்தில் வேகமாக பரவி வரும் பல்வேறு விதமான வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.தற்போது கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கொவிட்-19 கொரோனா எனும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே மாத்திரமே ஆகும்.

ஆகவே, ஏதேனும் கண்டறிப்பட்ட வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, அதனை தடுக்கும் விதமாக தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. எனினும், பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால், எந்த விதமான வைரஸ் அல்லது பக்டீரியா தொற்றிலிருந்தும் பாதுகாப்பாக இருக்க முடியும்" என்றார்.

நாம் இந்த ஆய்வில் இரண்டு விதமாக பரிசோதனைகளை நடத்தியிருந்தோம். முதலாவது பரிசோதனையில், இது உடலுக்கு எந்தவொரு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது என்பதையும் இரண்டாவது பரிசோதனையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதையும் இந்த இரண்டு பரிசோதனைகளிலும் உறுதிப்படுத்திக் கொண்டோம். எமது பரம்பரை அடிப்படையில் எமக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

எனினும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது நாம் செய்ய வேண்டியதொன்று ஆகும். ஆகவே, எந்தவொரு வைரஸ் தொற்றிலிருந்தும் எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு உடலில் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். அப்படியிருந்தால், எந்தவொரு வைரஸுக்கு எதிராகவும் போராட முடியும் என சிரேஷ்ட பேராரியர் ஜயந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments:

Post a Comment