கொழும்பு குடிநீர் சேவை வலுப்பெற்றுள்ளது, எதிர்காலத்தில் நீர் பற்றாக்குறை 75% ஆல் குறைக்கப்படும் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 14, 2021

கொழும்பு குடிநீர் சேவை வலுப்பெற்றுள்ளது, எதிர்காலத்தில் நீர் பற்றாக்குறை 75% ஆல் குறைக்கப்படும்

அமீன் எம் ரிழான் 

கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகரிலுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் விசேடமான படிமுறையை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களால் நிறைவேற்ற முடிந்தது.

அம்பத்தலை நீர் வழங்கல் அமைப்பை மேம்படுத்தல் மற்றும் எரிசக்தி மேம்பாட்டு கருத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்ட இத்துரித வேலைத்திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காணப்படும் தொடர்ச்சியான நீர் வெட்டுக்களை சுமார் 90% ஆல் குறைத்து அதிக திறன் கொண்ட சுத்தமான குடிநீரை தொடர்ந்து வழங்குவதற்கு இதன் கீழ் இடம்பெறும்.

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவா நாணாயக்கார அவர்களின் ஆலோசனையின் பேரில் மிகவும் முன்னுரிமையளித்து சுமார் 100 மில்லியன் ரூபாய் செலவில் இக்கருத்திட்டம் விரைவாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பத்தலை நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு கருத்திட்டத்தின், கருத்திட்ட பணிப்பாளர் பொறியாளர் ஜி.யு. ரஞ்சித் அவர்கள், “தற்போது கொழும்புக்கு நீர் வழங்குவது அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அகும். ஒரு நாளைக்கு ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் கன மீட்டர் வழங்கப்படுகிறது. 

மேலும், நாம் எதிர்பார்ப்பது, களனியின் தென் கரையில் உள்ள பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 50,000 கன மீட்டர் நீரை இந்த அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் கொழும்புக்கு வழங்குவதற்காகும். அதன் ஊடாக, கொழும்புக்கு வழங்கும் நீர் மட்ட்டானது அதிகரிக்கும். எனவே, நீர் அழுத்த நிலை குறைகிறதுடன் அதன் சேவை தரமும் மேம்படுகிறது. 

அதேபோன்று, அம்பத்தலையில் எதேனும் சில மேம்பாட்டுப் பணிகளைச் செய்யும்போது எமக்கு அம்பத்தலையின் உற்பத்தித் திறனைக் குறைக்க நேரிட்டால், அதற்காக இங்கு புதிதாக இன்று மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு நடவடிக்கை மூலம் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குறிப்பிட்டளவு நீர் பெற்று பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கப்பதையே நாம் எதிர்பார்க்கிறோம். 

மேலும், இந்த கருத்திட்டத்தின் மூலம், நாம் முதலாவதாக கொழும்புக்கு வழங்கும் நீரை தண்ணீரை விசை அழுத்தம் (பம்ப்) செய்வதற்கான மின்சார செலவைக் குறைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்பிரகாரம், மின்சார செலவை 15% முதல் 18% வரை குறைக்க இந்த திட்டத்தின் மூலம் நாம் பணியாற்றி வருகிறோம். 

மேலும், இங்குள்ள பெரும்பாலான நீர் விசையியக்கக் குழாய்கள் 30 வருடத்திற்கும் மேற்பட்டவை. அவற்றின் செயல்திறன் மிகவும் குறைவு. மேலும், அவர்களுக்கான உதிரி பாகங்கள் தற்போது கிடைக்கப் பெறவில்லை. அதன் காரணமாகவே, இந்த விசையியக்கக் குழாய்களிற்கு பதிலாக புதிய குழாய்களை மாற்றி, செயல்திறனை அதிகரித்து நாம் மிக உயர்ந்த சேவையை மக்களுக்கு வழங்க எதிர்பார்க்கின்றோம்.

மேலும், கொழும்பிற்கான நீர் வழங்கும் குழாய்கள் நூறு வருடத்திற்கும் மேற்பட்ட பழைமையானவைகளாகும். எனவே, பல சந்தர்ப்பங்களில் சாலையின் இருபுறமும் நீர் கசிவு ஏற்படுகிறது. எனவே, இந்த திட்டத்தை நாங்கள் முடித்த பின்பு, நீர் கசிவைக் குறைக்கப்பட்டு, கொழும்புக்கு தண்ணீரைக் கொண்டு வரும் நீர் குழாய் அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கவும் முடியும் என்று நான் நினைக்கிறேன். தற்போது, எமது கருத்திட்டத்தின் 44% வேலைகள் நிறைவடைந்துள்ளது. இந்த வேலைகள் அனைத்தையும் அடுத்த சில மாதங்களில் பூரணப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதன்போது, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் திரு. பியல் ராஜபக்ஷ அவர்கள் கருத்து தெரிவித்தபோது, இவ் அம்பத்தலை நீர் வழங்கல் முறையை மேம்படுத்துதல் மற்றும் எரிசக்தி மேம்பாட்டு கருத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் முதன்மை மேம்பாட்டுச் செயற்திட்டமான துறைமுக
நகர திட்டத்திற்குத் தேவையான நீரானது எம்மால் வழங்கப்படுகிறது. 

இது 100% தேசிய மட்டத்தில் எமது சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு தனித்துவமான செயல்முறை என்பதை விசேடமாக குறிப்பிடுதல் வேண்டும். 

மேலும், இந்த அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பல மேம்பாட்டுச் செயற்பாடுகளை நாம் இக்கருத்திட்டத்தின் ஊடாக மேற்கொண்டு கொழும்பு மாவட்ட மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எமது நோக்கமாகும்.

மஹேந்திரா ஹரிச்சந்திரா
ஊடக பணிப்பாளர்
நீர் வழங்கல் அமைச்சு

No comments:

Post a Comment

Post Bottom Ad