சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் விடுதலை : ஜோசப் ஸ்டாலின் அடிப்படை உரிமை மீறலென மனு தாக்கல் - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் விடுதலை : ஜோசப் ஸ்டாலின் அடிப்படை உரிமை மீறலென மனு தாக்கல்

கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டிருந்த, முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் தனிமைப்படுத்தலிலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 07ஆம் திகதி கொம்பனி தெரு பிரதேசத்தில், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் வைத்து முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட அவர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் பொலிஸாரினால் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிரந்த (07) நிலையில் பல்லேகல தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இன்று (16) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையானது, தனது அடிப்படை உரிமையை மீறுவதாக உத்தரவிடுமாறு அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற சுற்றுவடத்திற்கு அருகே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 16 பேர் முல்லைத்தீவு விமானப் படைத் தளத்திலுள்ள விசேட தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad