20 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டம் : கல்வி அமைச்சரின் கருத்துக்கள் அடிப்படையற்றது - இலங்கை ஆசிரியர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 18, 2021

20 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டம் : கல்வி அமைச்சரின் கருத்துக்கள் அடிப்படையற்றது - இலங்கை ஆசிரியர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில் 20 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஷப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசிரியர்கள் நிகழ்நிலை கற்பித்தலில் இருந்து விலகியுள்ளமைக்கு அப்பாற்பட்டதாக இப்போராட்டம் காணப்படும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

நிகழ்நிலை ஊடாக மாணவர்களுக்கு கற்பிக்கும் நடவடிக்கையினை ஆசிரியர்கள் தற்துணிவுடன் முன்னெடுத்தார்கள். ஆகவே நிகழ்நிலை கற்றல் முறைமையை கல்வி அமைச்சின் திட்டம் என குறிப்பிட முடியாது.

தொலைநோக்கு கல்வி முறைமை மற்றும் தொலைநோக்கு கல்வி முறைமை தொடர்பில் கல்வி அமைச்சர் குறிப்பிடும் கருத்துக்கள் அடிப்படையற்றது.

40 சதவீதமான மாணவர்கள் மாத்திரம் நிகழ்நிலை முறைமை ஊடான கற்றலில் ஈடுபட்டுள்ளார்கள். அவையும் முழுமையற்றதாக காணப்படுகிறது.

மாணவர்கள் வினைத்திறனான முறையில் கல்வியை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முறையான திட்டங்களை முன்னெடுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment