டெல்டா 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையாக அது இருக்கும் - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 20, 2021

டெல்டா 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையாக அது இருக்கும் - உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவி வருகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். 

அவர் கூறுகையில், டெல்டா வகை கொரோனா 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. அதன் பரவல் மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையாக அது ஆகக்கூடும். 

அனைத்து வகையான கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவி வருகிறது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad