மிளகு தோட்டத்திற்குள் நுழைந்த நபர், உரிமையாளரின் சூட்டில் பலி - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

மிளகு தோட்டத்திற்குள் நுழைந்த நபர், உரிமையாளரின் சூட்டில் பலி

மிளகு செய்கை ஒன்றுக்குள் அனுமதியின்றி நுழைந்த நபர் மீது அதன் உரிமையாளர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் பலியாகியுள்ளார்.

இன்று (08 பிற்பகல் மாத்தளை, ரத்தோட்டை, பொல்வத்த பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 29 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குறித்த காணியின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது தனது செய்கைக்குள் காட்டுப் பன்றியொன்று நுழைந்துள்ளதாக எண்ணியே தான் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக, குறித்த நபர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad