பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினர் அரசியலமைப்பு திருத்தம் கோரி சட்டமூலம் : பாராளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினர் அரசியலமைப்பு திருத்தம் கோரி சட்டமூலம் : பாராளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிப்பு

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர் ஒருவரால் சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பில் திருத்தத்தினைக் கோருவதாகும்.

இந்த சட்டமூலத்தினை சமர்பித்த உறுப்பினர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் ஆவார். அந்தச் சட்டமூலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள மாநிலங்களில் உள்ள குறிச் சொல்லொன்றை வழங்க வேண்டும் என்று கோருகின்றார்.

அதாவது அனைத்து சிறுபான்மையினருக்கும் காணப்படும் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ‘முஸ்லிம் அல்லாத’ என்ற குறிச் சொல்லை உள்ளீர்க்க வேண்டும் என்கிறார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸின் (பி.எம்.எல்-என்) கீசோ மல் கீல் தாஸ், உறுப்பினர் ஒருவர் தனிநபர் சட்டமூலத்தினை அறிமுகப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற செயலகத்திற்கு அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளார் என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்து சமயத்தினைச் சேர்ந்த குறித்த சட்டமன்ற உறுப்பினரின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் அரசியலமைப்பு தற்போது மில்லியன் கணக்கான பாகிஸ்தானிய முஸ்லிமல்லாதவர்களுக்கு ‘சிறுபான்மையினர்’ என்று தெளிவற்ற முறையில் குறிப்பிடுவதன் மூலம் பாகுபாடு காட்டுகிறது. இது தவறான குறிப்பு என்பதோடு இரண்டாம் தர குடிமக்கள் என்ற தோற்றத்தையும் அளிக்கிறது என்று கீசோ மல் கீல் தாஸ் மேலும் கூறினார்.

எதிர்வரும் அமர்வுகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்தச் சட்டமூலமானது சட்டமியற்றுபவர்களிடத்தில் “பாகிஸ்தானின் அரசியலமைப்பின் முன்னுரையில் இரண்டு முறை நிகழ்ந்திருக்கும் “சிறுபான்மையினர்” என்ற வார்த்தைக்கு பதிலாக 'முஸ்லிமல்லாதவர்கள்” என்பது மாற்றாக இருக்கும் என்று கோரி நிற்கின்றது.

அத்துடன் அரசியலமைப்பின் 36ஆவது பிரிவில் ‘சிறுபான்மையினர்’ என்ற வார்த்தையை எங்கிருந்தாலும், ‘முஸ்லிமல்லாதவர்கள்’ என்ற வெளிப்பாட்டுடன் மாற்றுவதன் மூலம் திருத்தம் செய்யலாம் என்றும் கீசோ மல் கீல் தாஸ் கேட்டுக் கொண்டார்.

1973 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் சிறுபான்மையினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் காணப்படும் பாகுபாடானது, நாட்டின் செழிப்பு, வளர்ச்சி மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்காக வாழ்க்கை ஆகியவற்றை சிதைப்பதாகவும், ஒவ்வொரு துறையிலும் அந்த மக்கள் தொகையின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கவையானதாக இருக்கும் போது, அவ்வாறான பாகுபாடு பொருத்தமற்றது என்பதையும் கீசோ மல் கீல் தாஸ், சட்டமூலத்திற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்களை வெளிப்படுத்தும் போது சுட்டிக்காட்டினார்.

“சிறுபான்மை” என்ற சொல் நான்கு முறை அரசியலமைப்பில் பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் ‘முஸ்லிமல்லாதவர்கள்’ என்ற சொல் 15 முறை பயன்படுத்தப்படுகிறது.

எனவே, சிறுபான்மையினர் என்ற வார்த்தையை முஸ்லிமல்லாதவர்கள் என்று மாற்றுவதன் மூலம் அரசியலமைப்பில் காணப்படும் சொற்றொடர் ஒழுங்கின்மையும் தவிர்க்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டின் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில், பாகிஸ்தானில் மத வெளிப்பாட்டிற்கான சுதந்திரம் கீழ்நோக்கிச் செல்வதை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக அவதூறுச் சட்டங்களின் வடிவத்தில், மரண தண்டனை வரை அவை நீடிக்கின்றது.

அவதூறு குற்றச்சாட்டில் பல நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் குறைந்தது 35 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று சிவில் சமூக அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியான சி.ஆர்.எப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அவதூறு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட 82 நபர்களில் 29 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அவதூறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் ஷியா (70 சதவீத வழக்குகள்) மற்றும் அஹ்மதி முஸ்லிம்கள் (20 சதவீத வழக்குகள்) குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு 2019 ஐ விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறைந்தது 199 நபர்கள் பாலியல் குற்றங்கள் புரிந்ததாகவும் பதிவாகியுள்ளது.

இவ்வாறிருக்க, சுமார் 220 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் பெரும்பான்மையான முஸ்லிம் நாடு. அங்கு மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தை இந்துக்கள் தற்போது உருவாக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment