இலங்கையில் இன்று 2,976 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

இலங்கையில் இன்று 2,976 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நேற்று சனிக்கிழமையுடன் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. அத்தோடு கடந்த 3 நாட்களாக மூவாயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,976 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அற்கமைய நாட்டில் பதிவாகியுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 205333 ஆகும்.

இவர்களில் ஒரு இலட்சத்து 6947 தொற்றாளர்கள் புத்தாண்டு கொத்தணியில் இனங்காணப்பட்டவர் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 1851 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரையில் ஒரு இலட்சத்து 66132 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

அத்தோடு 34569 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5265 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad