உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்திருந்த தனுஷ்க குணதிலக்க மற்றும் தனஞ்சய டி சில்வா வெற்றி - News View

Breaking

Post Top Ad

Saturday, June 5, 2021

உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்திருந்த தனுஷ்க குணதிலக்க மற்றும் தனஞ்சய டி சில்வா வெற்றி

எம்.எம். சில்வெஸ்டர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்போரில் உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்திருந்த தனுஷ்க குணதிலக்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் தமது இரண்டாவது உடற்பயிற்சி சோதனையில் வெற்றியடைந்துள்ளனர்.

கிரிக்கெட் தொடரொன்றில் பங்கேற்கும் குழாத்தில் இடம்பெறும் வீரர்கள் உடற்பயிற்சி சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதில் சகல வீரர்களும் 2 கிலோ மீற்றர் தூரத்தை 8 நிமிடங்கள் 35 செக்கன்கள் எனும் நேரப் பெறுதிக்குள் கடக்க வேண்டும். 

இதில் பங்களாதேஷ் தொடரின்போது மேற்கொள்ளப்பட்ட உடற்பயிற்சி சோதனையில், தனுஷ்க குணதிலக்க, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தோல்வியடைந்திருந்தனர். இதனால் இவ்விருவருக்கும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாது போகும் நிலை காணப்பட்டது.

எவ்வாறாயினும், இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமில் இவ்விருவரினதும் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், தற்போது அவர்கள் உடற்பயிற்சி பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளதால் இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad