ஜப்பானிய ஒலிம்பிக் கமிட்டியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

ஜப்பானிய ஒலிம்பிக் கமிட்டியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தற்கொலை

ஜப்பானிய ஒலிம்பிக் கமிட்டியின் (JOC) சிரேஷ்ட அதிகாரியொருவர் திங்கட்கிழமை காலை நிலத்தடி ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை டோக்கியோ பெருநகர பொலிஸ் ஆதாரங்களை மேற்கோள்காட்டி நிப்பான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

52 வயதான யசுஷி மோரியா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பிலான விசாரணை தற்சமயம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஜப்பானிய சுகாதார அமைச்சகம் ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக தற்கொலை வழக்குகளில் அதிகரிப்பு இருப்பதாக அறிவித்தது.

2020 ஆம் ஆண்டில் 20,919 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment