வரலாற்றில் முதல் முறையாக தபால் திணைக்களம் அதிக வருமானம் ஈட்டி சாதனை என்கிறார் கெஹெலிய - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

வரலாற்றில் முதல் முறையாக தபால் திணைக்களம் அதிக வருமானம் ஈட்டி சாதனை என்கிறார் கெஹெலிய

வரலாற்றில் முதல் முறையாக தபால் திணைக்களதுக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த கடினமான காலங்களில் அமைதியான சேவையைச் செய்யும் ஒரு நிறுவனமாக தபால் திணைக்களத்தை விவரிக்கலாம். அதன்படி, தற்போதைய தொற்றுநோய் நிலைமை இருந்த போதிலும், வீட்டிலுள்ள 1.7 மில்லியன் குடும்பங்களுக்கு மருந்து வழங்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கடினமான காலகட்டத்தில் தமது சேவைகளைத் தொடர்ந்தமைக்காக தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,

அதேபோல் கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 1.7 மில்லியன் குடும்பங்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. முன்னர் சரியான நேரத்தில் மருந்துகளை பெற இயலாமல் பலர் இறந்துள்ளனர். எமது சேவையால் பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad