தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு சென்ற பஸ் ஓமந்தையில் விபத்து - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு சென்ற பஸ் ஓமந்தையில் விபத்து

வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று (08) அதிகாலை விபத்திற்கு உள்ளாகியது.

குறித்த பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்கு உள்ளாகியது.

விபத்தின் போது பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad