சூதாட்டத்தில் ஈடுபட்ட ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை கைது - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

சூதாட்டத்தில் ஈடுபட்ட ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை சிஜிக்கோவாவை பாரிஸ் பொலிசார் கைது செய்தனர். சூதாட்டம் விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை யானா சிஜிக்கோவா. அவர் இரட்டையர் தர வரிசையில் 101 வது இடத்தில் உள்ளார்.

26 வயதான சிஜிக்கோவா கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் மேடிசனுடன் இணைந்து ஆண்ட்ரியா - பாட்ரிஷியா (ருமேனியா) ஜோடியிடம் தோற்றார்.

இந்த ஆட்டத்தின் முடிவு குறித்து வழக்கத்தை விட அதிகமானவர்கள் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் பொலிசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சந்தேகத்தின் பேரில் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் சிஜிக்கோவா ஆட்டநிர்ணயம் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. அந்த போட்டியில் அவர் வேண்டுமென்றே தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை சிஜிக்கோவாவை பாரிஸ் பொலிசார் கைது செய்தனர். 

சூதாட்டம் விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்சு பகிரங்க போட்டியில் அவர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad