இலங்கை அணி இங்கிலாந்து பயணமானது - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

இலங்கை அணி இங்கிலாந்து பயணமானது

குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்து பயணமானது.

இங்கிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ள குசல் ஜனித் பெரேரா தலைமையிலான 24 பேர் கொண்ட இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகள், 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை இங்கிலாந்திற்கு பயணமானது.

இங்கிலாந்து பயணமான இலங்கை குழாம் வருமாறு
குசல் ஜனித் பெரேரா - அணித்தலைவர் , குசல் மெண்டிஸ் , தனுஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, ஓஷத பெர்னாண்டோ, சரித் அசலங்க, தசுன் சானக்க, வணிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், சாமிக கருணாரத்ன, தனஞ்சய லக்ஷான், இஷான் ஜயரத்ன, துஷ்மந்த சமீர, இசுரு உதான, அசித பெர்னாண்டோ, நுவான் பிரதீப், பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், அகில தனஞ்சய, பிரவீன் ஜயவிக்ரம

No comments:

Post a Comment

Post Bottom Ad