கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்க முடிவு : விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டாபய - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்க முடிவு : விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டாபய

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

விசேட வர்த்தமானி அறிவித்தல் அறிவித்தலூடாக இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் 09 ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனூடாக தடுப்புகாவல் அனுமதியுள்ள காலம் வரையில் கிருலப்பனையிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிலேயே சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுப்புகாவல் அனுமதியுள்ள காலம் வரையில் கிருலப்பனையிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிலேயே தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment