கப்பல் அனர்த்தத்தினை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தமைக்கு அறியாமையா? தெரியாமையா? - கேள்வி எழுப்பியுள்ள ரணில் விக்கிமசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

கப்பல் அனர்த்தத்தினை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தமைக்கு அறியாமையா? தெரியாமையா? - கேள்வி எழுப்பியுள்ள ரணில் விக்கிமசிங்க

(ஆர்.ராம்)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தமைக்கு அதன் அறியாமையா தெரியாமையா காரணமாக உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் கடல் வளங்கள், சுற்றுச்சூழல், மற்றும் இதர துறைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எக்ஸ்பிரஸ் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் உரிய நடவடிக்கைளை முறையாக எடுத்திருக்கவில்லை என்பது வெளிப்படையானது. க

ப்பலொன்று தீப்பற்றுமாறு இருந்திருந்தால் முதலில் கப்பலைச் சுற்றி குறிப்பிட்டளவு தூரத்தில் மிதவையொன்றை அமைப்பார்கள். அதன் மூலம் கப்பலின் தீ எரிபொருள் உள்ளிட்ட பதார்த்தங்களில் பற்றி கடல் நீரில் பரவாதிருப்பதற்கான பாதுகாப்புக்கே அவ்விதமான நடவடிக்கையை உடன் முன்னெடுப்பது வழக்கமாகும். இந்த வழக்கமே உலகின் பல பாகங்களிலும் பின்பற்றப்படுகின்றது.

அத்துடன் அவ்வாறான மிதவையை அமைப்பதன் ஊடகாக கப்பலில் இருந்து எவ்விதமான பொருட்களும் கடலில் பரவலடையாது குறிப்பிட்ட பரப்பினுள்ளே கட்டுப்படுத்தப்படும். உதாரணமாக மேற்படி கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் இரசாயணப் பதார்த்தங்கள் மற்றும் பிளாஸ்ரிக் மூலப் பொருட்கள் என்பே ஏனைய இடங்களுக்கு பரவலடைவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவாகும்.

ஆனால், கப்பலில் தீப்பற்றிய போதும் அதனை அணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவ்விதமான எந்தவொரு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

இதற்கான காரணம் என்னவென்று தெரியாதுள்ளது. ஒருவேளை அரசாங்கத்தின் அறியாமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தின் தெரியாமையாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும் தற்போது நிகழ்ந்த அனர்த்தத்தினை முறையாக கட்டுப்படுத்தாமையின் காரணமாக பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்புக்களிலிருந்து மீள்வது கடினமானதாகும். கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்றீடுகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும். அதற்குரிய தெரிவுகளை வைத்திருக்கின்றதா என்பதும் கேள்விக்குரிய விடயமாகின்றது என்றார்.

No comments:

Post a Comment