திடீரென முடங்கிய பல பிரபல சர்வதேச இணையத்தளங்கள்! - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

திடீரென முடங்கிய பல பிரபல சர்வதேச இணையத்தளங்கள்!

சர்வதேச அளவில் பல முக்கிய இணையத்தளங்கள் சில மணி நேரம் செயல்படாமல் முடங்கியமை குறிப்பிடத்தக்கது.

ரெட்டிட், ஸ்பாடிஃபை, ஹெச்பிஓ மேக்ஸ், அமேசான்.காம், ஹூலு, கார்டியன், நியூயார்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்ட எண்ணற்ற இணையத்தளங்கள் இவ்வாறு திடீரென செயல்படாமல் முடங்கியுள்ளன.

குறித்த இணையத்தளங்களுக்குச் சென்ற பயனர்களுக்கு, "503 Service Unavailable' எனும் தடங்கல் தொடர்பான அறிவிப்பு திரையில் காண்பிக்கப்பட்டது.

இதனால் பல இலட்சக்கணக்கான பயனர்கள் இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கினர்.

குறித்த விடயத்திற்குக் காரணம், இவ்விணையத்தளங்களுக்கு சேமிப்பு இடத்தை வழங்கும் CDN (Content Delivery Network) சேவையை வழங்கும் மிகப் புகழ்பெற்ற நிறுவனமான Fastly எனும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட இணைய சேவையில் ஏற்பட்ட தடங்கள் என தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரச்சினை சீர் செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பாஸ்ட்லி பதிவிட்டுள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் பாஸ்ட்லி எனும் பெயர் ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad