மனித நுகர்விற்கு தகுதியற்ற 700 கிலோ கோழி இறைச்சியுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

மனித நுகர்விற்கு தகுதியற்ற 700 கிலோ கோழி இறைச்சியுடன் ஒருவர் கைது

மனித நுகர்வுக்கு தகுதியற்ற 700 கிலோ கிராம் கோழி இறைச்சியை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி 700 கிலோ கிராம் கோழி இறைச்சியினை பாதுகாப்பற்ற முறையிலும், நுகர்வோர் பயன்படுத்த முடியாத நிலையில் கொண்டு சென்ற போது வவுனியா ஈரட்டை பகுதியில் வைத்து கோழி இறைச்சி கொண்டு வந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad