திட்டமிட்டபடி ஜூன் 14 இல் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய் - இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

திட்டமிட்டபடி ஜூன் 14 இல் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய் - இராணுவத் தளபதி

ஏற்கனவே அறிவிக்கப்பட்படி, தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி நீக்கப்படுமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதியின் பின்னரும் நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

14 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்துவதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தில் இதுவரையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அவ்வாறு தீர்மானித்தால், அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

மாறாக 14 ஆம் திகதியின் பின்னரும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவையாகும். எனவே இது குறித்து மக்கள் வீண் கலவரமடையத் தேவையில்லை என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

கடந்த மே 25ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு ஜூன் 07 இல் நீக்கப்படுவதாக இருந்த நிலையில், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, 19 நாட்களின் பின் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad