மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு கொரோனா : ஒருவர் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு கொரோனா : ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வயோதிப பெண்ணொருவரும் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு - பயணியர் வீதியிலுள்ள வீடொன்றில் 84 வயதுடைய பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இதன்போது அவரின் உடல் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவான கொக்குவில் பகுதியில் 117 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம் மட்டக்களப்பில் 3 கொரோனா மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad