மியன்மாரில் விமானம் விபத்து - 12 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

மியன்மாரில் விமானம் விபத்து - 12 பேர் பலி

மியன்மாரில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானம் மண்டலே பிராந்தியத்திலுள்ள உள்ள பைன் ஓ எல்வின் நகரத்தில் உள்ள அனிசாகன் கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

தீயணைப்புத் துறையின் ஆரம்ப அறிக்கையின் படி விமானத்தில் 16 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad