முன்னாள் சபாநாயகர் மர்ஹும் எம்.எச்.முஹம்மதின் 100 ஆவது ஆண்டு நினைவு தினம் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

முன்னாள் சபாநாயகர் மர்ஹும் எம்.எச்.முஹம்மதின் 100 ஆவது ஆண்டு நினைவு தினம்

எம்.எஸ்.எம்.ஸாகிர்

முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.முஹம்மதின் 100ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கை இஸ்லாமிய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சூம் (zoom) மூலமான நினைவு தினக் கூட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03 மணிக்கு நடைபெறவுள்ளது.

'சிறுபான்மையினரும் சகவாழ்வும்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த நினைவு தின நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாகிஸ்தானின் செனட் சபை உறுப்பினர் ராஜா முஹம்மட் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில், விசேட பேச்சாளர்களாக நீதி அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கும்புறுகமுவ விஜித தேரர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, வில்லியம் பி. ஈபெனிஸர் ஜோஸப், டி.எம்.சுவாமிநாதன், கலாநிதி. அல் ஷெய்க் அப்துல் அஸீஸ் அப்துல்லாஹ் அல் அம்மார், கலாநிதி. அல் ஷெய்க் அப்துல்லா பின் பையாஹ், எம். இக்பால் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நிகழ்வினை கீழ் தரப்பட்டுள்ள சூம் முகவரியூடாக கண்டுகளிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad