பிலியந்தலை பொலிஸ் பிரிவு விடுவிப்பு ! மேலும் சில கிராம சேகவர் பிரிவுகள் முடக்கப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

பிலியந்தலை பொலிஸ் பிரிவு விடுவிப்பு ! மேலும் சில கிராம சேகவர் பிரிவுகள் முடக்கப்பட்டன

தனிமைப்படுத்தபட்டிருந்த பிலியந்தலை பொலிஸ் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

அதேபோல, நாளை அதிகாலை 5 மணி முதல் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் மஹரகம பொலிஸ் பிரிவின் அரவவெல வடக்கு கிராம சேவகர் பிரிவு நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவின் 10 கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிலுள்ள கொரகபிட்டிய, நம்பமுனுவ, தொம்பே, பட்டகத்தர வடக்கு, பெலன்வத்த மேற்கு, மகந்தன கிழக்கு, மாவித்தர வடக்கு, கெஸ்பேவ தெற்கு, மடபாத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே இவ்வாறு தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad