முகக்கவசம் அணியாதோருக்கு வீதியில் அண்டிஜன் பரிசோதனை செய்யும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

முகக்கவசம் அணியாதோருக்கு வீதியில் அண்டிஜன் பரிசோதனை செய்யும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்

நூருல் ஹுதா உமர்

நாட்டை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கும் கொவிட்-19 மூன்றாம் அலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் காரைதீவு பிரதேசத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் டீ. வேல்முருகு, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கையை மேற்கொண்டனர் .இதில் முகக்கவசம் அணியதவர்களுக்கு எதிராக உடன் கோவிட் 19 தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad