வெற்றி ஊர்வலங்கள் வேண்டாம்...! நந்திகிராமில் சொல்லி அடித்த மம்தா பானர்ஜி ! மேற்கு வங்காளத்தில் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 2, 2021

வெற்றி ஊர்வலங்கள் வேண்டாம்...! நந்திகிராமில் சொல்லி அடித்த மம்தா பானர்ஜி ! மேற்கு வங்காளத்தில் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார்

294 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

முதலில் திரிணாமுல் காங்கிரஸ்க்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. பின்னர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் முன்னணி பெற்றது.

5.30 நிலவரப்படி 216 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் திரிணாமுல் கட்சி ஆட்சியமைக்கிறது. மம்தா பானர்ஜி தொடர்ந்து 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

மதியத்தில் இருந்து முன்னிலைப் பெற்றாலும், மம்தா பானர்ஜி மாலை ஐந்து மணியளவில்தான் வீட்டு முன் குவிந்த மக்களின் முன்தோன்றினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது வீல் சேரில் காணப்பட்ட மம்தா இன்று நடந்து வந்தார். அப்போது ‘‘ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நம்முடைய வெற்றியை ஊர்வலங்களாக கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்றார்.

இந்நிலையில் சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டதால் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி பா.ஜ.க சார்பில் களமிறங்கினார். 

அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தபோது, நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சவால் விடுத்தார். இந்தச் சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். இதனால் நந்திகிராம் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதில் வெற்றி பெறுவது மம்தா பானர்ஜிக்கு கௌரவ பிரச்சனையாக கருதப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில், மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்தார். சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து அவர் பின்தங்கியதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

6 சுற்றுகள் வரை பின்தங்கிய மம்தா, 7வது சுற்றில் அதிக வாக்குகள் வாங்கினார். அந்த சுற்றில் 2700 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலை பெற்றதால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

அதன் பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து முன்னிலை பெற்ற மம்தா, வாக்கு எண்ணிக்கை நிறைவில் சுவேந்து அதிகாரியை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.

ஒட்டு மொத்த முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை பொருத்தவரை, திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான 148 இடங்களை விட அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. 

மாலை நிலவரப்படி 216 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்தது. பா.ஜ.க கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் இருந்தது. எனவே, மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராகிறார்.

No comments:

Post a Comment