திருகோணமலையில் மேலும் இரு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்! - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

திருகோணமலையில் மேலும் இரு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

திருகோணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டத்தின் உவர்மலை மற்றும் அன்புவெளி புரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகள், இன்று (சனிக்கிழமை) மாலை 6.00 மணி முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கப்பட்டதுடன் குறித்த பகுதியினை வதிவிடமாகக் கொண்டவர்கள் மாத்திரம் உள்நுளைவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, இந்தப் பகுதிகள் முடக்கப்படுவதாக முன்னரே அறிவிக்காததால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று தொழிலாளார் தின விடுமுறை காரணமாக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் சிரமம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad