அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயம் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயம்

அமெரிக்காவின், விஸ்கொன்சின் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஸ்கொன்சின் கிரீன் பேயில் அமைந்துள்ள கேசினோ நிலையெமான்றிலேயே அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டினையடுத்து சுமார் 50 முதல் 60 வரையான பொலிஸார் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெளிவாகக் கூறப்படாத நிலையில், குறித்த நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad