டோக்கியோ ஒலிம்பிக் சுடரோட்டத்திற்கு உதவிய 6 ஊழியர்களுக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

டோக்கியோ ஒலிம்பிக் சுடரோட்டத்திற்கு உதவிய 6 ஊழியர்களுக்கு கொரோனா

ககோஷிமாவின் தென்மேற்கு மாகாணத்தில் டோக்கியோ ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு உதவிய ஊழியர்களில் ஆறு பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் அமைப்பாளர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 27 ககோஷிமாவில் ஒலிம்பிக் சுடர் ஓடத்தின்போது அவர்கள் அனைவரும் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்கு உதவியுள்ளதுடன், முகக் கவசங்களையும் அணிந்திருந்தனர்.

அவர்களில் மூன்று பேர் அமாமி நகரத்திலும், மற்ற மூன்று பேர் கிரிஷிமா நகரத்திலும் கடமையில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

மார்ச் 25 முதல் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியதிலிருந்து அதில் பங்கெடுத்த மொத்தம் எட்டு ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தொற்றுநோய் காரணமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 23 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment