கண்டி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் 37 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்! - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

கண்டி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் 37 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கண்டி, குண்டசாலையில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) இரண்டு பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 37 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றுமுந்தினம் ஓருவர் குறித்த பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சி நிலையத்தில் பொலிஸ் கடமையில் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

இதில் நாடெங்கிலும் இருந்து சுமார் 120 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பயிற்சி நிலையம் மூடப்பட்டு குருணாகலுக்கு பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் மீண்டும் இவ்வாறான பயிற்சிகளை நடாத்துவது பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad