இலங்கையில் 6 மாவட்டங்களின் 7 பொலிஸ் பிரிவுகளில் 20 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

இலங்கையில் 6 மாவட்டங்களின் 7 பொலிஸ் பிரிவுகளில் 20 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்

கொழும்பு, காலி, அம்பாறை, இரத்தினபுரி, களுத்துறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 7 பொலிஸ் பிரிவுகளில் உள்ள 20 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

அந்த வகையில், இன்று (01) முற்பகல் 8.30 மணி முதல் கொழும்பு, காலி, அம்பாறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 4 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 7 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 3 பொலிஸ் பிரிவிகளில் உள்ள 13 பொலிஸ் பிரிவுகள் நேற்று (30) மாலை 6.05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad