கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் உடல் அடக்கம் : 21 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் உடல் அடக்கம் : 21 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

ராஜஸ்தானில் 2 வாரங்களில் 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்துக்கு உட்பட்ட கீர்வா கிராமத்தில் கொரோனா பாதித்த நபர் ஒருவர் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிரிழந்தார். அவரது உடல் அடக்கத்தில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததுடன், இறந்தவரின் உடலை பிளாஸ்டிக் பையில் இருந்து வெளியே எடுத்து பலரும் தொட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்குப்பின் அடுத்த 2 வாரங்களில் அங்கு 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எனினும் உயிரிழந்த 21 பேரில் 3 அல்லது 4 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். 

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்றும் கூறியுள்ள அதிகாரிகள் உயிரிழப்பு நிகழ்ந்த குடும்பங்களை சேர்ந்த 147 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

அந்த கிராமம் முழுவதும் தற்போது கிருமிநாசினி தெளித்து தூய்மைப்பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர்.

எனினும் இந்த தொடர் உயிரிழப்புகள் சிகார் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment