இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம், நம்மையும் பாதுகாத்து கொள்வோம் - மனோ கணேசன் எம்.பி - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம், நம்மையும் பாதுகாத்து கொள்வோம் - மனோ கணேசன் எம்.பி

எம்மைவிட மோசமாக கொரோனா பேராபத்தில் விழுந்து விட்ட அப்பாவி இந்திய மக்களுக்காக, எல்லா பேதங்களையும் தள்ளி வைத்து விட்டு, மனிதத்தின் பெயரால் பிரார்த்தனை செய்யுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, சுமார் 130 கோடி ஜனத்தொகை கொண்ட பாரத தேசம், இன்று கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறுகின்றது. இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்களின் கண்ணீர் எமக்கு தெரிகிறது. இது கொரோனா சுனாமி அவலம் என கூறப்படுகின்றது.

எமது நாட்டிலும் இந்த கொரோனா கொடுமை புதிய வீரியத்துடன் பரவி வருகின்றது. நாட்டின் சுகாதார துறையினருக்கு வழங்கும் பூரண ஒத்துழைப்பின் மூலம் இதை நாம் எதிர் கொள்ள வேண்டும். அரசாங்கத்தை பொறுப்புடன் செயற்படுமாறு கூறும், அதேவேளை பொதுமக்களாகிய நாமும் பொறுப்புடன் நடந்து இந்த பேரழிவை எதிர்கொள்ள வேண்டும்.

மிகப்பெரிய ஜனத்தொகையை கொண்டுள்ள எமது மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவில், ஒட்டு மொத்த ஜனத்திரளின் மத்தியில் வீரியமுள்ள கொரோனா கிருமிகள் வேகமாக பரவி வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாரதம் இந்த கொடுமையிலிருந்து விரைவில் மீள வேண்டும் என்ற நோக்கில் நாம் நமது வீடுகளில் இருந்தபடி பூஜை, நமாஸ், பிரார்த்தணைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad