கைக் குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் தாய் - குழந்தை பரிதாபமாக பலி - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

கைக் குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் தாய் - குழந்தை பரிதாபமாக பலி

இளம் வயது தாயொருவர், தனது கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், குழந்தை உயிரிழந்த நிலையில், தாய் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று, மஹியங்கனை பகுதியில், இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த இளம் தாய்க்கும், அவரது கணவருக்குமிடையில் குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாக, கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மன வேதனை அடைந்த தாய் தனது பதினைந்து மாத ஆண் குழந்தையையும் தூக்கிக் கொண்டு, கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது குறித்த சம்பவத்தைக் கண்ட அயலவர்கள் ஓடி சென்று, அந்த கிணற்றில் இருந்து தாயையும், குழந்தையையும், மீட்டனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக மஹியங்கனை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், மீட்கப்பட்ட கைக் குழந்தை இறந்து விட்டதாகவும், ஆனால் குழந்தையின் தாயைக் காப்பாற்ற முடியுமென்றும் தெரிவித்தனர்.

மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த மாப்பாகடவெவ கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய தாய் அவரது பதினைந்து மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தையையும் தூக்கிக் கொண்டே, அவர்களது வீட்டுக் கிணற்றில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து, மஹியங்கனைப் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad