முல்லைத்தீவில் ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

முல்லைத்தீவில் ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்பு

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்று (26) 10 ஆர்.பி.ஜி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பகுதியில் வயல் நிலங்களை அண்மித்த பகுதியில் உள்ள வனப் பிரதேசத்தில் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு இன்று விசேட அதிரடிப் படையினரை அழைத்து சென்று குறித்த பகுதியில் இருந்து பத்து ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த குண்டுகள் நீதிமன்ற அனுமதியுடன் தகர்த்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment

Post Bottom Ad