நெருப்புடன் விளையாட வேண்டாம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது சீனா - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

நெருப்புடன் விளையாட வேண்டாம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது சீனா

ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்கா சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக தாய்வான் மற்றும் ஹொங்கொங் பிரச்சினை, ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தாய்வான் விவகாரத்தில் தலையிடுவதை சுட்டிக்காட்டி நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியதாவது தாய்வான் விவகாரத்தை துருப்பு சீட்டாக வைத்துக் கொண்டு சீனாவுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். அமெரிக்கா அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சீனாவின் ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா கட்டாயம் மதிக்க வேண்டும்.

அதேபோல் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்களை இனப்படுகொலை என கூறும் அமெரிக்காவின் கூற்றை சீனா ஒருபோதும் ஏற்காது. இது அரசியல் நோக்கங்களுக்காக புனையப்பட்ட பெரிய பொய்யாகும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad