தாய்லாந்தின் எல்லைக்கு அருகிலுள்ள மியன்மார் இராணுவ புறக்காவல் நிலையத்தை கைப்பற்றிய கரேன் படைகள் - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

தாய்லாந்தின் எல்லைக்கு அருகிலுள்ள மியன்மார் இராணுவ புறக்காவல் நிலையத்தை கைப்பற்றிய கரேன் படைகள்

கரேன் தேசிய ஒன்றியத்தின் (KNU) படைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தாய்லாந்தின் எல்லைக்கு அருகிலுள்ள மியன்மார் இராணுவத்தின் ஒரு புறக்காவல் நிலையத்தை கைப்பற்றியதாக ஆயுதக் குழுவின் வெளியுறவுத் தலைவர் படோ சா தாவ் நீ ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

மியான்மரில் சிறுபான்மை இன கரேன் மக்களின் அரசாங்க எதிர்ப்பு ஆயுத அமைப்பு 'KNU' ஆகும்.

முகாம் ஆக்கிரமிக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகவும், தமது குழு இன்னும் இறப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து சோதனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

கரேன் இன இராணுவத்தின் படைகளால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் தாய்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அருகே ஒரு இராணுவ புறக்காவல் நிலையத்தில் கடும் சண்டை வெடித்ததாக தாய்லாந்தின் நம்பகுத் தகுந்த வட்டாரங்களும் உறுதிபடுத்தியுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைத் தொடர்ந்து வரும் சால்வீன் ஆற்றின் குறுக்கே துப்பாக்கிச் சூடு கேட்கப்பட்டதாகவும், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோ காடுகள் நிறைந்த மலைகளில் இருந்து தீ மற்றும் புகை எழுவதையும் வெளிக்காட்டியுள்ளது.

"மே சாம் லேப்பிற்கு எதிரே உள்ள மியான்மர் இராணுவ புறக்காவல் நிலையத்தில் கடும் சண்டை நடந்துள்ளது" என்று வடமேற்கு தாய் நகரமான மே ஹாங் சோனைச் சேர்ந்த ஒரு மாகாண அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தியுள்ளார்.

"எங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் நிலைமையை மதிப்பிடுகிறார்கள், ஆனால் இதுவரை தாய் தரப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை." என்று அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளார்.

எனினும் டாட்மாடா என்று அழைக்கப்படும் மியான்மரின் இராணுவம் இது தொடர்பில் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பெப்ரவரி 1 சதித்திட்டத்தில் ஜெனரல்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி மியான்மரை கொந்தளிப்பில் ஆழ்த்தியதால் இப்பகுதியில் மோதல் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad