டெங்கு உட்பட மேலும் சில வைரஸ் காய்ச்சல்கள் சிறுவர்களுக்கு பரவல் - விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

டெங்கு உட்பட மேலும் சில வைரஸ் காய்ச்சல்கள் சிறுவர்களுக்கு பரவல் - விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை

டெங்கு காய்ச்சல் உட்பட மேலும் சில வகை வைரஸ் காய்ச்சல்கள் நாட்டில் காணப்படுவதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்பட ​வேண்டுமென்றும் சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வரும் அதேவேளை சில வகை வைரஸ் காய்ச்சல் தொடர்பில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி நோய் தொடர்பில் எவ்வாறு செயற்படவேண்டுமென்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இக்காலங்களில் சிறுவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் அபாயம் காணப்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவையே நோயின் அறிகுறிகளாக உள்ளன.

மேலும் சிலருக்கு டெங்கு அல்லது அதற்கு சமமான நோய் அறிகுறிகள் தென்படலாம். எனினும் அது கொரோனா வைரஸ் பாதிப்பு அல்ல. அது வேறு ஒரு வகை வைரஸின் தாக்கமே. நாட்டின் மேலும் சில பகுதிகளில் சிறுவர்கள் மத்தியில் வாயை சுற்றி புண்கள் ஏற்படுகின்றன.

கை, கால்களில் சிவப்பு பருக்கள் போன்று உருவாகின்றன. அது தொடர்பில் தகவல்கள் கிடைத்து வருகின்றன. அவ்வாறு காணப்படும் சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டாம். உரிய மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக்கொள்வது சிறந்தது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment