தமிழகத்தில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அதிரடியாக தடை விதித்தது தேர்தல் ஆணையம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

தமிழகத்தில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அதிரடியாக தடை விதித்தது தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் திகதியன்று வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஏப்ரல் 6 ஆம் திகதி ஒரே கட்டமாகவும், சில மாநிலங்களில் மூன்று மற்றும் எட்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே மாதம் இரண்டாம் திகதியன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் மே மாதம் 2 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதும், நிறைவடைந்த பிறகும் அரசியல் கட்சிகள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தகைய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது.

இதனிடையே கொரோனாத் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என மக்களும், பல மாநில உயர் நீதிமன்றங்களும் குற்றம் சாட்டியிருப்பதால் தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கையினை எடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad