புத்தளம் - வனாத்தவில்லு வெடி பொருட்கள் களஞ்சிய விவகாரம் : அறுவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுத்தார் சட்டமா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

புத்தளம் - வனாத்தவில்லு வெடி பொருட்கள் களஞ்சிய விவகாரம் : அறுவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுத்தார் சட்டமா அதிபர்

புத்­தளம் - வனாத்­த­வில்லு, லக்டோஸ் தோட்­டத்தில், வெடி பொருட்களை சேக­ரித்து களஞ்­சி­ய­ப்­படுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில், தேசிய தெளஹீத் ஜமாஅத் எனும் தடை செய்­யப்­பட்ட அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரான நெளபர் மெள­லவி உள்­ளிட்ட 6 பேருக்கு எதி­ராக சட்டமா அதிபர் புத்­தளம் மேல் நீதி­மன்றில் வழக்குத் தொடுத்துள்ளார்.

நேற்­றையதினம் 14 குற்றச் சாட்­டுக்­களின் கீழ் இவ்­வ­ழக்­கினை சட்டமா அதிபர் தாக்கல் செய்­த­தா­கவும், அதனை விசா­ரணை செய்ய மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஒன்­றினை அமைக்­கு­மாறு சட்டமா அதிபர் பிர­தம நீதி­ய­ர­ச­ரிடம் எழுத்து மூலம் கோரி­ய­தா­கவும், சட்டமா அதி­பரின் செய்தித் தொடர்­பாளர் அரச சட்ட­வாதி நிஷாரா ஜய­ரத்ன தெரி­வித்தார்.

தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் உயிரை மாய்த்­துக்­ கொண்ட மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்­மது அஹமது ஹஸ்தூன் ஆகி­யோ­ருடன் இணைந்து, வனாத்­த­வில்லு பகுதியில் வெடி­ பொ­ருட்­களை சேக­ரிக்கும் மற்றும் தயா­ரிக்கும் இடமொன்­றினை முன்­னெ­டுத்து சென்­ற­தாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் இந்த 6 பேருக்கும் எதி­ராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அபூ தஹ்தா எனும் மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீன் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெள­லவி அல்­லது மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர், அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி ஆகிய 6 பேருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

நாச­கார அல்­லது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் எண்­ணத்­துடன் வனாத்­தவில்லு பகு­தியில் வெடி­ பொ­ருட்­களை சேகரிக்க சதி செய்­தமை, யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்டாக்கள் உள்­ளிட்ட வெடி ­பொ­ருட்­களைச் சேக­ரித்­தமை, வெடி பொ­ருட்­களை உற்­பத்தி செய்­தமை தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்­டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிரதிவாதிக­ளுக்கு எதி­ராக விஷேட குற்­றச்­சாட்டு முன் வைக்கப்பட்டுள்­ளது. 

அத்­துடன் வெடி ­பொருள் சேக­ரிப்பு, தயா­ரிப்பு, ஆயுத பயிற்சி உள்ளிட்­ட­வற்­றுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் அனைத்து பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ராக குற்­றச்­சாட்டு முன் வைக்கப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, முதல் பிர­தி­வா­தி­யான அபூ தஹ்தா என­ப்படும் மொஹம்மட் முபீஸ் மீது, பயங்­கரவாதத்­துக்கு நிதி­ய­ளித்­தலை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. 

ஆயுத களஞ்­சி­யத்­துடன் கூடிய வனாத்துவில்லு லக்டோ தோட்டத்தின் ஒரு பகுதியை ஆயுத பயிற்சிகளை முன்னெடுக்க அபூ உமர் எனும் சாதிக் அப்துல்லாஹ்வுக்கு வழங்கியமை தொடர்பில் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Vidivelli

No comments:

Post a Comment