ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஜேர்மனி, கனடாவில் கட்டுப்பாடு - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஜேர்மனி, கனடாவில் கட்டுப்பாடு

இரத்த உறைவு அச்சம் காரணமாக 60 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்குவதை ஜேர்மனி இடைநிறுத்தியுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி வழங்கப்பட்ட சுமார் 2.7 மில்லியன் பேரில் மிக அரிதாக 31 இரத்த உறைவுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அந்நாட்டு மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக 55 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்குவதை கனடா இடைநிறுத்தியது.

எனினும் தமது தடுப்பூசியில் ஆபத்தை விடவும் மிக அதிக நன்மை இருப்பதை​ சர்வதேச மருந்து சீராக்க அமைப்புகள் கண்டுபிடித்திருப்பதாக அஸ்ட்ராசெனகா தெரிவித்துள்ளது.

எனினும் இது பற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டது. 

கடந்த மாத ஆரம்பத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்தை ஐரோப்பாவின் அதிக நாடுகள் இடைநிறுத்திய நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் மருந்து சீராக்க அமைப்புகள் அந்த மருந்துக்கு அதரவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி ஐரோப்பாவில் பரவலாக பயன்படுத்தப்படுவதோடு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு அந்த மருந்து இலாப நோக்கின்றி விநியோகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad