மருதூர் மகுடம் மர்ஹும் வை.எம்.ஹனீபா அவர்களுக்கு அக்கரைப்பற்று மாநகர சபையில் அனுதாப பிரேரணை முன் வைப்பு! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

மருதூர் மகுடம் மர்ஹும் வை.எம்.ஹனீபா அவர்களுக்கு அக்கரைப்பற்று மாநகர சபையில் அனுதாப பிரேரணை முன் வைப்பு!

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று மாநகர சபையின் 37 வது அமர்வு முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.

முதல்வர் தனது துவக்க உரையின் போது அக்கரைப்பற்று மாநகர சபையில் புதிதாய் கடமையேற்றிருக்கும் ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபிக்கு சபை உறுப்பினர்கள் சார்பாக தனது மானசீக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

இதனையடுத்து மாநகர சபை உறுப்பினர்களும் புதிய ஆணையாளருக்கு தமது உரைகளின் போது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், கடந்த 29.03.2021 அன்று காலமான சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ்.வை.எம். ஹனீபா அவர்களுக்கான அனுதாப பிரேரணையை முன் வைத்து முதல்வர் உரை நிகழ்த்தினார்.

இதன் போது, மர்ஹும் வை.எம். ஹனீபா அவர்கள் ஒட்டு மொத்த சமூகத்தின் வரலாற்று கதாநாயகர்களில் ஒருவர் ஆகும். அவரது மறைவானது மருதூர் மண்ணுக்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பேரிழப்பாகவே கருதப்படுகிறது. 

கடந்த காலங்களில் அக்கரைப்பற்று எவ்வாறு ஒற்றுமையின் பக்கம் அணி திரண்டதோ, அது போல சாய்ந்தமருதூரின் ஒற்றுமைக்கு ஓர்மையுடன் விதை தூவி அதில் வெற்றி கண்டவர் மர்ஹும் வை.எம். ஹனீபா அவர்கள் ஆகும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருந்திட முடியாது. 

அல்ஹாஜ். வை.எம்.ஹனீபா அவர்களது இழப்பும் அதன் தொடர்ச்சியுமான துயரமானதும் மருதூருக்கு மாத்திரமானதல்ல, அது அக்கரைப்பற்றுக்கும் தான்.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தினருக்கும், மருதூர் மக்களுக்கும் அக்கரைப்பற்று மக்கள் சார்பாகவும், மாநகர சபை உறுப்பினர்கள் சார்பாகவும் எனது ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனையினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment