துருக்கியில் ஊரடங்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

துருக்கியில் ஊரடங்கு அறிவிப்பு

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 37,312 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,67,281 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப்ரல் 29 முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே 17 வரை துருக்கியில் முழு பொதுமுடக்கம் இருக்கும் என்றும், நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைப்பதே தற்போதைய இலக்கு என்றும் துருக்கி ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு முன் அனுமதியுடன் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க முடியும் எனவும், மாகாணங்களுக்கு இடையே 50 சதவீத பொதுப் போக்குவரத்து மட்டுமே இயக்கப்படும் எனவும், பாடசாலைகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment