மே மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுகிறார் ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

மே மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுகிறார் ரணில் விக்கிரமசிங்க

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த பொதுத் தேர்தலின் போது கிடைக்கப் பெற்ற தேசிய ஆசனத்தில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளவுள்ளார்.

மே மாதம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான இறுதிக்கட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாட்டில் காணப்படுகின்ற மக்களின் பொருளாதார பிரச்சினைகள், கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பரந்துபட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிகொத்தாவில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தற்போது நாட்டிற்கு அத்தியாவசியமானதொன்றாகியுள்ளது.

எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் கட்சியிலிருந்தும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களிடம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்குள் மீண்டும் வலுவானதொரு எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் குறித்து பல தரப்பினரும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கலந்துரையாடியமை தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்த வகையில் தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப்பட்டியல் ஆசனத்தில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்லவுள்ளார்.

ஆரம்பத்தில் குறித்த தேசிய பட்டியல் ஆசனத்தை பிரதி தலைவர் ருவன் விஜேவர்தனவிற்கே வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களினால் பலரும் ரணில் விக்கிரமசிங்க குறித்து கவனம் செலுத்தி கருத்துக்களை தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் விவகாரங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப்பிரிவு ஆதரவாக செயற்பட தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு தேவையாயான சட்ட பாதுகாப்பிற்கு ஐ.தே.க சட்டத்தரணிகளை முன்னிலையாகுமாறு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment