சாய்ந்தமருதில் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு : வழிமுறைகளை பேணாதோர் மீது நடவடிக்கை ! - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

சாய்ந்தமருதில் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு : வழிமுறைகளை பேணாதோர் மீது நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர்

நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தலைமையில் இன்று (27) சுகாதார சுற்றிவளைப்பொன்று கல்முனை மாநகரில் நடைபெற்றது. 

அதன் ஒரு கட்டமாக சாய்ந்தமருதில் நடைபெற்ற திடீர் சுகாதார சுற்றிவளைப்பில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள், வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாத், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கல்முனை பொலிஸார், பாதுகாப்பு படை அதிகாரிகள், சுகாதார துறை ஊழியர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த சுற்றிவளைப்பின் போது சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக்கவசம் அணியாதோர் என பலரும் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. 

மேலும் மக்கள் நெரிசலாக கூடுவதை எவ்வாறு தவிர்க்கச் செய்வது என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து இங்கு வர்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad