முல்லைத்தீவு மாவட்டத்தின் எட்டாவது பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தின் எட்டாவது பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தின் எட்டாவது பொலிஸ் நிலையமாக ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், புதுக்குடியிருப்பு, மல்லாவி, வெலிஓயா ஆகிய பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருகின்ற நிலையில் எட்டாவது பொலிஸ் நிலையமாக ஐயன்கன்குளம் புதிய பொலிஸ் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அவர்கள் கலந்துகொண்டு பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களுக்கான பாதுகாப்பான பொலிஸ் சேவையை மேம்படுத்துகின்ற நோக்கில் ஐயன்கன்குளம் புத்துவெட்டுவான் போன்ற 6 கிராம சேவையாளர் பகுதிகளை உள்ளடக்கியதாக ஐயன்கன்குளம் புதிய பொலிஸ் நிலையம் இன்று முதல் தனது சேவையை ஆரம்பிக்கின்றது

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இதன் ஊடாக குறித்த பகுதிகளை அண்டிய பகுதிகளிலேயே இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் நிலையம் ஊடாக மக்களுக்கான சேவைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் இங்கு தெரிவித்திருந்தார்

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment